தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு : பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள்

அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசுளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

திருப்பூர்: அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசுளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். 



அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில், பார்க் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். முழு உருவசிலைக்கு மாவட்ட கழக செயலாளர் சி. சிவசாமி தலைமையில் ஏராளமான கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். 

இதேபோல, பல்லடம், அவிநாசி, அன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கழக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். இந்த உற்சாகமான கொண்டாட்டத்தில் மாவட்ட கழக இணை செயலாளர் ஜோதிமணி, மாவட்ட பாசறை செயலாளர் சதீஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டி. பார்த்திபன், களஞ்சியம் பொன்னுசாமி, சூர்யா, செந்தில் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...