தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது.
நீலகிரி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்த இந்த சுற்றுலா பயணத்தில் கரிக்கையூர், குஞ்சப்பண்ணை, புத்தூர் வயல், பொண்ணூர், நடுவட்டம், கார்குடி உண்டு உறைவிட பள்ளிகளில் படிக்கும் 150 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். பின்தங்கிய பகுதிகளில் வாழும் இந்த மாணவர்களுக்கு இயற்கையைப் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைப்பது மற்றும் கழிவறைகளை பயன்படுத்துவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
இந்த ஒருநாள் சுற்றுலாவின் போது உதகையிலுள்ள அருங்காட்சியகம், ஆளுநர் மாளிகை, தாவரவியல் பூங்கா, பழமை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் வானியல் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட உள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவதாகவும், நீலகிரி மாவட்டத்திற்காக ரூ. 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் முரளி தெரிவித்தார்.