செய்தி எதிரொலி: முடங்கிப் போன தாய்-சேய் ஊர்தி சேவை மீண்டும் உயிர் பெற்றது

பொள்ளாச்சியில் முடங்கிப்போன தாய்-சேய் ஊர்தி சேவை மீண்டும் உயிர் பெற்று இயங்கத் தொடங்கியது.

கோவை: பொள்ளாச்சியில் முடங்கிப்போன தாய்-சேய் ஊர்தி சேவை மீண்டும் உயிர் பெற்று இயங்கத் தொடங்கியது. 

பொள்ளாச்சியில் தாய்-சேய் சிகிச்சைக்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த 102 ஆம்புலன்ஸ் கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இது தொடர்பாக "பொள்ளாச்சியில் செயல்படாத 102 ஆம்புலன்ஸ்" சேவை என்ற தலைப்பில் கடந்த 3-ம் தேதி சிம்ப்ளிசிட்டியில் செய்தி வெளியிடப்பட்டது.

இது தமிழ்நாடு அரசின் இலவச தாய்-சேய் சேவை மையத்தின் தொடர்பு அலுவலரிடம் பேசினோம். அவர், "பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் 102 வண்டி பழுதடைந்து உள்ளது. ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக தற்போது இந்த சேவை முடங்கிப் போயுள்ளது." என்று முரண்பட்ட கருத்துக்களை கூறினார்.

பின்னர், திட்ட இயக்குநர் ரூபனை தொடர்பு கொண்ட போது, " உடனடியாக மாற்று சேவை வாகனம் அமைத்து மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறோம்." என்றார். அதேபோல் செய்தி வெளியிட்டு ஓரிரு நாளில் 102 வண்டி செயல்பட தொடங்கியது.



இது குறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், " 102 வாகனம் ஏழை, எளிய தாய்மார்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப்புற தாய்மார்கள் இந்த சேவையை மகிழ்வுடன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை ஒரு நாள் செயல்படவில்லை என்றாலும் தாய்மார்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். எங்களின் கோரிக்கையை ஏற்று விரைவாக தாய்-சேய் சேவை ஊர்தி சேவையாற்ற தயாரானது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...