திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்: திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த கையேடு அம்மாநிலத்தில் இருந்த லெனின் சிலை இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழகம் முழுவது எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த பதிவை நீக்கினார்.
இந்த நிலையில் பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கை கண்டித்து தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டனங்களை தெரிவித்தனர்.

காவல்துறை அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் எச்.ராஜாவை கைது செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தனர்.