அய்யாக்கண்ணுவுக்கு 'ப்பளார்' விட்ட பா.ஜ.க. பெண் நிர்வாகி - வீடியோ

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக் கோரி விழிப்புணர்வு நடைபயணத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை நேற்று திருச்செந்தூர் வந்தடைந்தது. அப்போது, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், கோவில் வளாகத்தில் துண்டு பிரசுரம் கொடுப்பதை தடுத்தார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது அய்யாக்கண்ணு அந்த பெண்ணை தகாத வர்த்தையில் திட்டினார். இதில் ஆத்திரமடைந்த பா.ஜ.க. நிர்வாகி நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யாக்கண்ணு குழுவினர் நெல்லையம்மாளை தாக்க முயற்சித்தனர். 

கோவில் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் நடந்த சம்பவத்தை தடுக்க போலீசார் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சம்பவத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, "மரபணு மாற்றப்பட்ட விதைகளை பிரதமர் மோடி கொடுக்கக் கூடாது, அவருக்கு நல்ல எண்ணத்தை கொடுக்க வேண்டும், இந்த விதைகளை இந்தியாவில் இறக்குமதி செய்யமல் இருக்க கடவுளிடமும் வேண்டுகிறோம். மேலும், இப்படி கோவிலில் வேண்டக் கூடாது என்றும், கோவிலில் நோட்டீஸ் கொடுக்க கூடாது என்றும் பா.ஜ.க. பெண் நிர்வாகி தகராறு செய்தார். உச்சநீதிமன்ற உத்தரவை தடுத்த முதல் பிரதமர் மோடி மட்டுமே. அவர் விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொண்டு இருக்கிறார்." என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...