மீள முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை சில விதிகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுடில்லி: மீள முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை சில விதிகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், "மீள முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணைல் கொலை செய்ய அனுமதிக்கலாம். கண்ணியத்துடன் மரணமடைய மனிதர்களுக்கு உரிமை உள்ளது. தன்மானத்துடன் இறப்பது அடிப்படை உரிமை. கருணைக் கொலை மற்றும் வாழும்போதே தன் உயிர் தொடர்பான உயில் எழுதி வைக்கும் நடைமுறை சட்டப்படி செல்லும். நோயாளியின் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிர் பிரிய அனுமதிக்கலாம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.