'வெட்டிங் வாவ்ஸ்': திருமண தொழில் பெண் சாதனையாளர் விருதுகள்

'வெட்டிங் வாவ்ஸ்' பத்திரிக்கை சார்பில் திருமண தொழில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.


கோவை: 'வெட்டிங் வாவ்ஸ்' பத்திரிக்கை சார்பில் திருமண தொழில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது. 



கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை 'வெட்டிங் வாவ்ஸ்' பத்திரிக்கை சார்பில் திருமண தொழில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமண தொழிலில் சாதனை படைத்த திருமண திட்டமிடல், அலங்காரம், சமையல், ஆடை வடிவமைப்பு, போட்டோகிராபர் மற்றும் மெகந்தி போடுபவர்கள் போன்ற 9 வகையான துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த பெண்களை தேர்வு செய்யும் குழுவில் முன்னாள் உலக அழகி ஜெயா மகேஷ், பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அலுவலர் அனுஷா ரவி, வருமான வரித்துறை துணை ஆணையர் காஞ்சனா ராணி மற்றும் நித்யானந்தினி மனோகரன் ஆகியோர் வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

இதில் வளரும் தொழில்துறையினர் விருது ரேஷ்மா ஸ்ரீஜெய்க்கும் திருமண திட்டமிடுதல் விருது ஐனஸ் நானிகிற்கும் வழங்கப்பட்டது. சிறந்த திருமண புகைப்பட கலைஞர் விருது நிக்கிதா குமாரன் என்பவருக்கும், சிறந்த திருமண திட்டமிடல் விருது நித்யா-வுக்கும், சிறந்த அலங்கார விருது வைஷ்ணவி அரவிந்திற்க்கும் வழங்கப்பட்டது.



மேலும், சிறந்த சமையல் கலைஞர் விருது கீதாவிற்கும், மெகந்திகான விருது சரண்யாவிற்கு வழங்கப்பட்டது. சிறந்த கேக் தயாரிப்பிற்கான விருது சஹானா லக்‌ஷ்மி என்பவருக்கும், சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது பங்காருப்ரியா என்பவருக்கும், சிகை அலங்காரம் விருது விவேதா தினேஷ் மற்றும் சிறந்த அழைப்பிதழ் விருது ஹரிணிக்கும் வழங்கப்பட்டது. 

இது குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளர் தக்‌ஷணாமூர்த்தி கூறுகையில், "திருமண நிகழ்வுகளில் தற்போது பெண்கள் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகின்றனர். கற்பனை திறன் கொண்டு புதுமை படைத்து வருகின்றனர். திருமண தொழில் சாதனையாளர்களின் கடின உழைப்பை கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது." என்றார்.



விருது வழங்கும் விழாவினை தொடர்ந்து கோவை நகரின் ஆடை வடிவமைப்பு பேஷன் ஷோ நடைபெற்றது. மேலும், இந்த ஆண்டின் சிறந்த மணமகள், மணமகன், சிறந்த ஜோடிகள் சிறந்த திருமணம் உள்ளிட்டவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், புதிய தொழில் முனைவோர் ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...