காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின.
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்தவற்காக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தவும், நாளை காவிரி வாரியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 4 மாநில பிரதிநிதிகள் கொண்ட குழுவில் தங்கள் நிலைப்பாட்டை வெளிபடுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் என்ன? என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக கூறப்படவில்லை. சட்ட நிபுணர்கள் தரும் ஆலோசனைப்படி காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளதாக தெரிவித்தார்.