கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி குட்டியை வனப்பகுதியினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி குட்டியை வனப்பகுதியினர் பத்திரமாக மீட்டனர்.

வால்பாறையை அடுத்துள்ள சவரங்காடு எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் மாலை 4.00 மணியளவில் சிறுத்தைப்புலி குட்டி ஒன்று தேயிலைத் தோட்டத்தில் கண்டதாக வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேலுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

இத்தகவலையடுத்து, வானவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று சிறுத்தைப்புலி குட்டியை மீட்டு, ஐயர்பாடி வன உயிரின மேலாண்மை மற்றும் மீட்பு மையத்திற்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். அதில், பிடிபட்டது 3 மாதமே ஆன ஆண் சிறுத்தைப்புலி குட்டி எனவும், தற்போது சிறுத்தைப்புலி ஆரோக்கியமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இன்று இரவு சிறுத்தைப்புலி குட்டியை அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு விடுவதாக வனச்சரக அலுவலர் சக்திவேல் கூறினார்.