கோவை மாவட்டம் மருதமலை அருகே வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றித் திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.
கோவை : கோவை மாவட்டம் மருதமலை அருகே வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றித் திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மருதமலை வனப்பகுதிக்குள் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் கல்லீரம்பாளையம், ஐ.ஓ.பி. காலனி, பொம்மணம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, மூன்று நாட்களாக தேடப்பட்ட மான் இன்று காலை மருதமலை முருகன் நகர் குடியிருப்பு பகுதி அருகே ஒரு புதரில் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு மீண்டும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வன அதிகாரிகள், புள்ளிமானை பத்திரமாக மீட்டு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் வனப்பகுதி ஒட்டிய பின் பகுதியில் உள்ள நூறு நாள் குட்டை பகுதியில் விட்டனர்.