சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வேளாண்மையில் மகளிர் - சிறப்பு கருத்தரங்கு

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வேளாண்மையில் மகளிர் கருத்தரங்கு மற்றும் மாடித்தோட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வேளாண்மையில் மகளிர் கருத்தரங்கு மற்றும் மாடித்தோட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார். 



தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கலையரங்கில், இந்த நிகழ்ச்சியை மீன்வளத்துறை பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று துவங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம், காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 10 வட்டாரங்களில் பெண் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டம், 2016-17 முதல் 60:40 என்ற விகிதத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரப்படுகின்றது. 2 மடங்கு உற்பத்தி 3 மடங்கு வருமானம் என்ற இலக்குடன், பெண் விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் விவசாயத்தில் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.166 ஊராட்சிகளில் 16,800 பெண் விவசாயிகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 14,800 நபர்களுக்கு இதுவரை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

பெண்கள் அதிக அளவில் பங்குகொள்ளும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2017-18ல் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் மூலம், இதுவரை 21.88 கோடி மனிதசக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு, அதற்காக ரூ. 3,272 கோடி ஊதியமாக வழங்கி, தமிழகம் இந்திய அளவில் சாதனை படைத்து பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ், 40,000 வீடுகள் ரூ. 840 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 2016-17 மற்றும் 2017-18ம் ஆண்டுகளில், மொத்தம் 3,06,552 வீடுகள் ரூ.5,358 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. இவ்வீடுகள் பெருமளவில் பெண்கள் பெயரிலேயே வழங்கப்படுகின்றன என்பதை நான் இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டும், நகர்ப்புறங்களிலும் காய்கறி, கீரை போன்றவற்றை உற்பத்தி செய்ய இயலும் என்பதை நிரூபிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் வண்ணம், இந்தியாவிலேயே மிகப்பெரிய மாடித் தோட்டத்தை, அன்னை தெரசா மகளிர் வளாக கட்டிடத்தின் மேற்பரப்பில், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அமைத்துள்ளது. இது அனைவரின் பாராட்டுதலையும் பெற்று, மாடித் தோட்டம் அமைக்க அனைவருக்கும் ஓர் உந்து சக்தியாகத் திகழ்கிறது. 120 பெண்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, முதன்மை பெண் பயிற்றுநர்களாக அவர்கள் மாநில / மாவட்ட அளவில் செயல்பட்டு வருகின்றனர். இதனைப் பின்பற்றி, தூத்துக்குடி ஆணையர் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றின் மேற்பரப்பிலும் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், பெண்களுக்கான மகளிர் சுய உதவிக் குழுக்கள், மானிய விலையில் இருசக்கர வாகனத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றியும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...