நீலகிரியில் மீன் வலையில் சிக்கிய பாம்பு உயிருடன் மீட்பு

உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

நீலகிரி : உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது. 



நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மலை காய்கறிகளான கேரட், பிட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இப்படி பயிரிடப்படும் காய்கறிகளை அடிக்கடி வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள விவசாய நிலங்களில் முள் வேலிகள் மற்றும் மின் வேலிகள் மற்றும் மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், உதகை அருகேயுள்ள அத்திக்கள் என்னும் கிராமத்தில் ஒரு குடியிருப்பு அருகே சாரை பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கியுள்ளதாக வன பாதுகாவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வன பாதுகாவலர் சாதிக் மீன் வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறு வன விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க இதை போன்ற மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். இதில் சிக்கி சிறு வன விலங்குகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் இதைப் போன்று மீன் வலைகளை வேலிகளில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...