யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை : யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளிடம் பேசியதாவது, "ஹெச்.ராஜா கருத்து குறித்து எதுவும் கூற முடியாது. இது போன்ற கருத்துகள் தெரிவிக்க தான் ஜெயகுமார் உள்ளார். ஜெயகுமார் அதற்கு விளக்கம் அளித்துவிட்டார். தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநில தமிழகம். வருகின்ற திங்களன்று, மலேசிய தமிழ் சார்ந்த ஆசிரியர்களுடன் தமிழ் அறிஞர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதன் மூலம் மலேசியாவில் தமிழ் வளர்ச்சி அடையும்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக, யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் தமிழ் புத்தகங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான உத்தரவு முதலமைச்சரிடம் இருந்து வந்த பின்னர் இலங்கை பள்ளி கல்வித்துறை அமைச்சரைச் சந்திக்க விரைவில் இலங்கை செல்ல உள்ளோம்." என்றார்.