வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

திருப்பூர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், பொங்கலூர் ஆகிய இடங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் கடந்த சில நாட்களாக சுமார் 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.70-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ.5 வரை இருந்தது. சில்லரைக்கு கிலோ ரூ.8-க்கு விற்கப்பட்டது.



இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து சுமார் 8 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், ஒரு பெட்டி தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ.6 ஆக இருந்ததால் மளிகை கடை, தள்ளுவண்டிகளில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, "நன்கு பழுத்து கனிந்த பழங்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டு, நல்ல தரமான கெட்டியான நிலையில் உள்ள தக்காளியை மட்டுமே பறித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால் வரத்து குறைந்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது." என்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...