கோவை : சேலம் டவுன் ரயில் நிலையம் சேலம் கோட்டத்தின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில் உலக இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தெற்கு ரயில்வே உள்ள பன்னோக்குக் கருத்தரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசுகையில், "சேலம் கோட்ட நிர்வாகம் பெண் ஊழியர்களுக்காக பல்வேறு வசதிகளையும் மேம்பாடுகளையும் செய்து வருகிறது. எப்பொழுதும் எந்த ஒரு பெண் ஊழியர் விடுமுறை கோரி விண்ணப்பித்தாலும் எந்த ஒரு தடையும், மறுப்பும் இன்றி அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது.

மேலும், சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் டவுன் ரயில்நிலையம் இக்கோட்டத்தின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்வே பள்ளிகளில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் இதர ஊழியர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் பெண்களாக கொண்ட அனைத்து மகளிர் கல்விக் கூடமாக மாற்றப்பட உள்ளது." என்றார்.
இவ்விழாவில், சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் உமா மகேஸ்வரி, சேலம் கோட்ட பணியாளர் நல அலுவலர் எஸ். திருமுருகன், சேலம் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட் செயலாளர் எம்.கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.