ஆந்திராவில் பா.ஜ.க. அமைச்சர்கள் ராஜினாமா: சந்திரபாபு நாயுடுவிற்கு பதிலடி

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்த தெலுங்கு தேசம் கட்சிக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க, அமைச்சர்கள் இரண்டு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.


மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்த தெலுங்கு தேசம் கட்சிக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க, அமைச்சர்கள் இரண்டு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலக தெலுங்கு தேச கட்சி முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, மத்திய அமைச்சரவையிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஓய்எஸ் சவுத்ரி இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தங்களது பதவி விலகல் குறித்து இருவரும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளனர்.



இந்நிலையில், தெலுங்கு தேச கட்சியின் முடிவுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், சந்திரபாபு அரசில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க., அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சுகாதார அமைச்சர் பதவி வகித்த கமினேனி ஸ்ரீநிவாஸ், மற்றும் மாநில அறநிலையத்துறை அமைச்சர் பிடிகொண்டலா மனிகைலா ராவ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து, தங்களது கடிதத்தை முதலமைச்சர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

ஆந்திர சட்டசபையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: நேற்றைய ஜெட்லியின் அறிக்கை சரியானதல்ல. உங்கள் கைகளில் வடகிழக்கு மாநிலங்கள் இருக்கலாம். ஆனால், ஆந்திரா அல்ல. அந்த மாநிலங்களுக்கு தொழில் வளர்ச்சி நிதி நீங்கள் அளித்திருக்கலாம். ஆனால், ஆந்திராவிற்கு வழங்கவில்லை. ஏன் இந்தப் பாகுபாடு. மாநில அரசிலிருந்து பா.ஜ.க, அமைச்சர்கள் விலகியுள்ளனர். அவர்கள் மாநிலத்தின் நலனுக்காக சிறப்பாக உழைத்துள்ளனர். மாநிலத்தில் ஆக்கப்பூர்வமான சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...