நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுக்கும் சிலை விவகாரம் : கேரளாவில் காந்தியின் சிலை மர்ம நபர்களால் சேதம்

கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தி சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீசியதில், சிலை சேதம் அடைந்துள்ளது.


கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தி சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீசியதில், சிலை சேதம் அடைந்துள்ளது. 

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தின் நீட்சியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. சிலைகள் உடைக்கப்படும் சம்பவத்துக்கு பிரதமர் மோடி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில அரசுகள் சிலைகள் அவமதிக்கும் சம்பவம் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. கன்னூர் மாவட்டம் தலிபரம்பா பகுதியில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை மீது கற்கள் வீசப்பட்டன. இதில், சிலை சேதம் அடைந்தது. இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிகிறது. இதையடுத்து, சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களைப் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...