பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்ற எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வியடைந்தது. அங்கு வெற்றி பெற்ற பா.ஜ.க., கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தெற்கு திரிபுரா மாவட்டத்தில் பெலோனியா என்ற நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சோவியத் யூனியன் நாட்டைச் சேர்ந்த புரட்சியாளரும், கம்யூனிஸ்டு தலைவருமான லெனின் சிலையை பா.ஜ.க.வினர் அகற்றியதால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பா.ஜ.க.,வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பதிவில் இன்று திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் ஈ.வே.ரா.சிலை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யக் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசனும் நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இன்று போயாஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனமானது என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தனது அனுமதியின் தன்னுடைய முகநூல் அட்மின் இதனைப் பதிவு செய்துவிட்டதாகவும், இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எச். ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.