எச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆதிதமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை: எச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆதிதமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் பெரியாரின் சிலையை அகற்றப்படும் என்று எச்.ராஜா தனது சமூக வலைதள பதிவில் பதிவிட்டிருந்தார். இதனால் தமிழகத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில், சாதி ஒழிக்கப் போராடிய பெரியாரை இழிவுப்படுத்தும் விதமாக பேசியதற்காகவும், தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்டும் செயலில் ஈடுபட்டதற்காகவும் அவரை குண்டர் சட்டத்தின் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று ஆதித்தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.