திருப்பூர் அருகே காப்பீட்டு தொகை மூலமாக சிகிச்சை அளிப்பதாகக் கூறி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவரை, மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மருத்துவமனை நிர்வாகம் பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் அருகே காப்பீட்டு தொகை மூலமாக சிகிச்சை அளிப்பதாகக் கூறி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவரை, மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மருத்துவமனை நிர்வாகம் பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கோல்டன் நகரில் வசித்து வருபவர் தங்கமணி. டெய்லராக வேலை பார்த்து வரும் தங்கமணி தனது நண்பர் ஹென்றியுடன் கடந்த மாதம் 24-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் தங்கமணி படுகாயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் 108 ஆம்புலேன்ஸ் மூலமாக அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, காப்பீட்டின் மூலம் சிகிச்சை மேற்கொள்வதாக தெரிவித்த அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள், பின்னர் ரொக்கமாக பணம் செலுத்த சொல்லி தங்கமணியின் மனைவி முத்துகாளியை வற்புறுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தங்கமணியின் மனைவி முத்துக்காளி, கூலி வேலை செய்து வரும் தங்களிடம் பணம் செலுத்த வசதி இல்லை என்றும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொள்கிறோம் என கூறியும் மருத்துவர்கள் வற்புறுத்தலினால் மட்டுமே, காப்பீட்டு தொகை மூலமாக சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், தற்போது, தொடர்ச்சியாக மருத்துவமனை நிர்வாகம் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தனது கணவரை பணயமாக வைத்து தனியார் மருத்துவமனை ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும், கூலி தொழிலாளியான தனது கணவரை மிட்டு தரக்கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட முத்துகாளி குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், தனது கணவரை மீட்டுதரக்கோரி தங்கமணியின் மனைவி முத்துகாளி இணை ஆணையர் கயல்விழியை சந்தித்து புகார் மனு அளித்தார்.
இதுவரை 80 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவமனை நிர்வாகத்திடம் செலுத்திய பிறகும், மேலும் 90 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும் என வற்புறுத்துவதோடு, வழக்கை வாபஸ் வாங்கினால் தான் தங்கமணியை மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பமுடியும் என மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, முத்துக்காளியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, திருப்பூர் வடக்கு போலீசார் இரு தரப்பையும் விசாரித்து வருகின்றனர்.
காப்பீட்டு தொகை பெற்றுத் தருவதாக கூறி இதுபோன்று தனியார் மருத்துவமனைகள் திருப்பூர் மற்றும் பல்லடம், தாராபுரம், அவினாசி, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு செயல்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அரசு மருத்துவமனையில் சுற்றிவரும் இடைத்தரகர்கள் 108 ஆம்புலேன்ஸ் சேவைகள் மூலம் மேல் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்டவர்களுடைய உறவினர்களிடம் தகவல் தெரிவிக்காமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பீட்டை பயன்படுத்தி பணம் பறிக்கும் சம்பவம் பெருமளவில் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.