திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த பெருமாள், ஜெயா ஆகியோரின் மகன் ஆனந்தன் (40) என்பவர் பல்லடம் அருள்புரம் பாச்சாங்காட்டுப்பாளையம் ஜி.பி தோட்டத்தில் ஒருவருடமாக தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணிக்கு விட்டில் இருந்து வெளியே சென்றவர், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக அவரைத் தேடி வந்த நிலையில், இன்று காலை பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டை தண்ணீரில் ஆனந்தனின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
இதனைக் கண்ட பொதுமக்கள் ஆனந்தனின் வீட்டிற்கும், பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆனந்தனின் சடலத்தை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.