திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க. தேசிய செயலாளரான எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டதற்கும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்தும் திராவிட கழகத்தினர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், எச்.ராஜா புகைப்படத்தை காலணியைக் கொண்டு அடித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடும் எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் எனக் கோசங்களை எழுப்பினர்.