தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம் என்று பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கூறியுள்ளார்.
நீலகிரி: தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம் என்று பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கூறியுள்ளார்.
நீலகிரியில் கிறிஸ்துவ வழிப்பாட்டு தலங்களை மூட சில அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் போலீசாரை கண்டித்து உதகையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவ ஜெப வழிபாடு கூடங்களை நடத்த விடாமல் தடுக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மத நல்லிணக்கத்திற்கு விரோதமாகவும், செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிறித்துவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கே.பி.எடிசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது. தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியது கண்டனத்துக்குரியது. தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம்." என்றார்.