திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவையில் புரட்சிகர மாணவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவையில் புரட்சிகர மாணவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரில் நேற்று இரவு பெரியார் சிலை பா.ஜ.க.வினரால் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு புரட்சிகர மாணவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பெரியார் சிலையை தமிழகத்தில் இருந்து அகற்றுவதாகக் கூறிய பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்தனர். மேலும், மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.