தேசிய அளவிலான தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீட் தேர்வுக்காக விண்ணப்பிப்பவர்கள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில், தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.