சிறையில் சசிகலா சலுகைகள் பெற்ற விவகாரம் : டி.ஜி.பி.யின் குற்றச்சாட்டுக்கு கர்நாடக முதலமைச்சர் மறுப்பு

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கிய விவகாரத்தில் முன்னாள் டிஜிபிக்கு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கிய விவகாரத்தில் முன்னாள் டிஜிபிக்கு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 



சொத்து குவிப்பு வழக்கில், தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கூறி சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றச்சாட்டு கூறினார். மேலும் சிறையில் போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க சில பரிந்துரைகளும் அரசுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுவது குறித்து அரசு உத்தரவின் பேரில் சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சிறை அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் தங்களது விசாரணையையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா கூறியதால், சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கினேன் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி. சத்தியநாராயணா மனு செய்து உள்ளார். மேலும், சசிகலாவுக்கு கட்டில், தலையணை போன்ற சலுகைகள் வழங்கியதாக மனுவில் சத்தியநாராயணா தகவல் தெரிவித்து உள்ளார்.

ஆனால், டி.ஜி.பி. இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது :- சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குமாறு, முன்னாள் டி.ஜி.பி. சத்தியநாராயணாவுக்கு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சத்தியநாராயணா பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார், இவ்வாறு கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...