தமிழக சட்டசபையில் வரும் 15-ம் தேதி பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் வரும் 15-ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் 15-ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். 

சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடந்த பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த மாதம் 12-ந்தேதி ஜெயலலிதா திருவுருவ படத்தை திறந்து வைப்பதற்காக சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற 31-ந்தேதிக்குள் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக நிதித்துறையைக் கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை இடம் பெறச் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை வழங்கினார். 

சட்டசபை செயலாளராக இருந்த பூபதி ஓய்வு பெற்று விட்டதால் அந்த பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் பட்ஜெட் தாக்கல் தாமதம் ஆனது. தற்போது, சபாநாயகரின் தனிப்பிரிவு செயலாளராக இருந்த சீனிவாசன் சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறையைக் கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 15-ம்தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 15-3-2018 ஆம் நாள், வியாழக்கிழமை, காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...