சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடும் பா.ஜ.கவினர் மீது கடும் நடவடிக்கை: அமித்ஷா எச்சரிக்கை

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது :- ஒரு கட்சி என்ற முறையில், பறந்த அளவிலான கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை இந்தியாவில் இணைத்துக்கொள்ள முடியும் என்று நாங்கள் பா.ஜ.க.,வை நம்புகிறோம். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நம் பெரிய தேசத்தை எப்படிக் கருதினார்கள் என்பதுதான் இது. சிலைகளை அழிப்பதில் சமீபத்திய பிரச்சினை மிகவும் துரதிர்ஷ்டமானது. யாரும் சிலைகளை சேதப்படுத்துவதில் நாங்கள் ஒரு கட்சியாக ஆதரிக்கவில்லை. மக்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதே எங்கள் முக்கிய நோக்கம். இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் எங்களது பணி மற்றும் செயல்பாடுகள் பெரிதும் பாராட்டை பெற்று உள்ளன. எங்கள் கூட்டணி அரசாங்கம் 20 மாநிலங்களில் சேவை செய்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய மாநில கட்சி தொண்டர்களுக்கும் கூறிக்கொள்கிறேன். பா.ஜ.க. தொடர்புடைய எந்த நபரும் சிலைகளை சேதப்படுத்துவதில் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்தால் கட்சியில் இருந்து கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...