தமிழகம், திரிபுராவில் சிலைகள் உடைப்பு சம்பவங்களால் பிரதமர் மோடி அதிருப்தி

தமிழகம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டிய பா.ஜ.க., முதல்முறையாக அங்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. முதல் முறையாக பா.ஜ.க. திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றி இருப்பதால் அங்கு அக்கட்சியின் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் மார்க்சிஸ்ட்– பா.ஜ.க., தொண்டர்களிடையே மோதலும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பெலோனியா நகரில் நிறுவப்பட்டிருந்த சோவியத் ரஷியாவின் மறைந்த தலைவர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், “லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்)’ என்று பதிவிட்டு இருந்தார். 

எச்.ராஜாவின் கருத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, சர்ச்சைக்குரிய பதிவை தான் பதிவிடவில்லை எனவும், பேஸ்புக் அட்மின் தனது அனுமதியின்றி பதிவு செய்து விட்டார் என்றும் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எச்.ராஜா விளக்கம் அளித்து இருந்தார். 

இந்த நிலையில், சிலைகள் சேதப்படுத்துவது தொடர்பான சம்பவங்களால் பிரதமர் மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பிரதமர் மோடி பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தலைவர்கள் சிலைகளை உடைப்பவர்கள் மீது மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிலைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுத்தியுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...