கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இன்று அதிகாலை சில நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, காவல் நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன் என்பவர் சரணடைய வந்தபோது அவரை மடக்கிப் பிடித்த போலீசார் அவர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர பொறுப்பாளர் ஜீவானந்தம் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.