கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பாக்குமரத்தட்டு, துணிப்பைகள் போன்ற மக்கும் பைகளை விற்கும் பசுமை அங்காடியகத்தை ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.
கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பாக்குமரத்தட்டு, துணிப்பைகள் போன்ற மக்கும் பைகளை விற்கும் பசுமை அங்காடியகத்தை ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 'மை ஷாப்பிங் மை பேக்ஸ்' என்ற புதிய திட்டத்தின் முயற்சியாக, மாநகராட்சி பசுமை அங்காடி இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்தப் பசுமை அங்காடி பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மக்கும் தன்மை கொண்ட பொருட்களான துணிப்பைகள், சணல் பைகள், கரும்பு, சோளம் மற்றும் காய்கறி கழிவுகளைக் கொண்டு தயார் செய்யும் பல்வேறு கரிம பொருட்கள் இந்த அங்காடியில் விற்பனை செய்யப்படும்.
காகிதத்தால் ஆன பொருட்கள் மற்றும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் ரூ. 1.60 காசுகள் முதல் ரூ. 250 வரை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படும். இந்தப் பசுமை அங்காடி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி உணவு இடைவேளை ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் செயல்படும். இந்த புதிய முயற்சியின் மூலம் மக்கும் பைகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா தூய்மையான, பசுமையான கோவை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். மேலும், இந்தப் பசுமை அங்காடி குறித்த பல்வேறு தகவல்களுக்கு 81900-00400 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.