திரிபுராவில் பா.ஜ.க., கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மோதல் : கலவரத்தால் 144 தடை உத்தரவு

திரிபுராவில் புதிய அரசு ஆட்சியமைக்க உள்ள நிலையில், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரிபுராவில் புதிய அரசு ஆட்சியமைக்க உள்ள நிலையில், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



திரிபுரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. மொத்தம் உள்ள 60 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க. இந்த வெற்றியை திரிபுரா மக்கள் முன்னணி என்ற மாநிலக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பெற்றது. தேர்தலின் போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் மோதலில் பா.ஜ.க. தொண்டர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தேர்தல் முடிவு வெளியான பின்பு பா.ஜ.க. தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு திரிபுரா மாவட்டத்தில் சித்தாய் பகுதியிலும், வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கதம்தலாவிலும் பா.ஜ.க. தொண்டர்களுக்கும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், இரு கட்சியின் அலுவலகங்களும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்த லெனின் சிலை தகர்க்கப்பட்டது. பதிலுக்கு பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்பட்டது. இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் பயங்கர கலவரம் மூண்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.

கலவரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திரிபுரா கலவரம் பற்றி தகவல் அறிந்ததும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனடியாக திரிபுரா ஆளுநர் தாதகத்தராய் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே. சுக்லா ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசினார். கலவரத்தை அடக்க மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், புதிய அரசு பதவி ஏற்கும் வரை கலவரம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...