துணிவிருந்தால் பெரியார் சிலை மீது கை வையுங்கள் - கு.ராமகிருட்டிணன் அதிரடி

தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சையான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள எச்.ராஜாவுக்கு, துணிவிருந்தால் பெரியார் சிலை மீது கை வையுங்கள் என்று அதிரடி பதிலை தந்திருக்கிறார் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன்.


கோவை: தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சையான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள எச்.ராஜாவுக்கு, துணிவிருந்தால் பெரியார் சிலை மீது கை வையுங்கள் என்று அதிரடி பதிலை தந்திருக்கிறார் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன்.

கடந்த 3-ம் தேதி நடைபெற்று முடிந்த திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஆட்சி கூட ஏற்காத நிலையில் அம்மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் லெனின் சிலை பா.ஜ.க.வினரால் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

"இன்று லெனின் சிலையை அகற்றப்பட்டது போல நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் பெரியாரின் சிலைகளையும் அகற்றுவோம்" என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எ.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறும் போது, "தமிழகத்தில் ஜாதி வெறியை தூண்டி வன்முறையை ஏற்படுத்தி, ரத்த பூமியாக்க வேண்டும் என்பதற்காகவே வெறிப்பிடித்த சிந்தனையில் ராஜா இது போல் பதிவு செய்து வருகிறார்.

அவருக்குத் துணிவிருந்தால் ஒரு இடத்திலாவது கை வைத்துப் பார்க்கட்டும். தமிழக அரசு தந்தை பெரியாரின் மீது மரியாதை வைத்திருந்தால் எச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு உடனடியாக தொடுக்க வேண்டும். அவரை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போகிறோம்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...