அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பொதுமக்களிடம் சிக்கிக் கொள்பவர்களில் முக்கியமானவர் எச்.ராஜா. முன்பெல்லாம் அந்த கட்சியில் யார் தலைவர் என்றே தெரியாமல் இருந்தது.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பொதுமக்களிடம் சிக்கிக் கொள்பவர்களில் முக்கியமானவர் எச்.ராஜா. முன்பெல்லாம் அந்த கட்சியில் யார் தலைவர் என்றே தெரியாமல் இருந்தது. அனால், தற்போது சர்ச்சை கருத்துக்களை கூறியே "பேமஸ்" ஆகிவிடலாம் என்ற நுணுக்கத்தைக் கற்றுக்கொண்ட அவர் தொடர்ந்து அதை செயல்படுத்து வருகிறார்.
அந்த வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று வன்முறை வெடிக்கும் விதமாக ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார் எச்.ராஜா. திராவிடத்தை உரக்கப் பேசும் தமிழகத்தில் எச்.ராஜ-வின் பதிவுக்கு பல்வேறு கண்டனங்கள் தெரிவித்து வருகிறது.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் செய்த பதிவு பின்வருமாறு :-
"லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமியின் சிலை."

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது பேஸ்புக் பக்கத்தில் புகுந்த நெட்டிசன்கள் எச்.ராஜாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

"அரசியல்ல இதெல்லா சாதரணமப்பா" என்ற தோணியில் 'கப்-சிப்' என்று முடங்கிப்போயுள்ளது எதிரணி.