திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் வன்முறையைத் தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் செய்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் வன்முறையைத் தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற கையேடு அம்மாநிலத்தில் இருந்த லெனின் சிலையை அகற்றியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவரின் சமூக வலைதள பக்கத்தில், "லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமியின் சிலை." என்று பதிவிட்டுள்ளார்.
அமைதிப் பூங்காவான தமிழகத்தில் எச்.ராஜா போன்ற சிலர் வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவுகளை இடுவது கண்டனத்திற்கு உரியது என்று பல்வேறு தரப்பினரும் அவருக்குக் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், "யார் அகற்றப்படும் என்று கூறுகிறாரோ அவரும் அகற்றப்படுவார். சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.