காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க -தி.மு.க எம்.பி.க்கள் கூட்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர்.
கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், அந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு வற்புறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மத்திய நீர்ப்பாசன மந்திரியைச் சந்திக்குமாறு கூறப்பட்டது.
இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அ.தி.மு.க - திமு.க உள்ளிட்ட எம்பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், எம்.பி. தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தி.மு.க. மற்றும் இந்திய கம்யூ. எம்.பி-க்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பதாகைகளை ஏந்தி அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.