மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் இரண்டு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பிளிச்சி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் இரண்டு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பிளிச்சி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (42). பிளிச்சி பகுதியின் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்தகுமார் நேற்று பவானிசாகர் ஊராட்சி நிர்வாகம் சம்பந்தமான அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொள்ள தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமுகை சக்தி சாலையில் பெத்திக்குட்டை அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆனந்தகுமார் அவரது கண்களை தானம் செய்துள்ளார். கோவை அரவிந்த் மருத்துவக்குழு அவரது கண்களை எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.