கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தாத ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தாத ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும் , மாவட்டம் முழுவதும் காவல் துறை உதவியோடு கஞ்சா விற்கப்பட்டு வருகிறது என்று கூறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த முன்ற அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், " இரண்டு முறை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இருவரிடமும் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் மாதம்பட்டி பகுதியில் காவல் துறையினரின் உதவியோடு கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இதனைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டதில் ஈடுபட்டோம்.
தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஈஸ்வரன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.