வால்பாறையில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வால்பாறை : வால்பாறையில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறையின் உலக வன உயிரின நாளை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகங்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், வால்பாறை பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லுரி வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக வால்பாறை தபால் நிலையம் சென்றடைந்தனர்.
இப்பேரணியில் வனத்தைக் காப்போம், வன உயிரினங்களைக் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். இப்பேரணியை வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேனி, வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் கலந்து கொண்டனர்.