கோவை மாவட்டத்தில் உள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறையினர் ஆண்டு கணக்கெடுப்பிற்கு திட்டமிட்டுள்ளனர்.
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறையினர் ஆண்டு கணக்கெடுப்பிற்கு திட்டமிட்டுள்ளனர்.
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், கோவை, போளுவாம்பட்டி மற்றும் மதுக்கரை உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் குறித்து அறிவதற்கான கணக்கெடுப்பை நடத்த கோவை வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நாளை முதல் தொடங்கும் இந்த கணக்கெடுப்பில், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் இனங்கள் மற்றும் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன.
இந்தக் கணக்கெடுப்பு பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்கென, 7 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒரு ஒருங்கிணைப்பாளர் 4 குழுக்களை மேற்பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் முதல்முறையாக நடத்தப்படும் ஆண்டு கணக்கெடுப்பில், உள்ளூர் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சி இனங்களையும் கணக்கெடுக்கின்றனர்.