சிறப்பு கட்டண ரயில்களின் வழித்தடம் மாற்றியமைப்பு

கோடை சீசனையொட்டி திருநெல்வேலி, செங்கோட்டைக்கு விடப்பட்ட ரயில்களின் சேவைகளை கிணத்துக்கிடவு வழியாக மாற்றியமைத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : கோடை சீசனையொட்டி திருநெல்வேலி, செங்கோட்டைக்கு விடப்பட்ட ரயில்களின் சேவைகளை கிணத்துக்கிடவு வழியாக மாற்றியமைத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த 23-ம் தேதி முதல் கோவையில் இருந்து இயக்கப்பட்டு வரும் இந்த ரயில்கள், கேரளா வழியாக செல்கின்றன. இதற்கு பல்வேறு தரப்பினர் இணையதளத்தின் மூலமாக மத்திய அரசை வறுத்தெடுத்ததுடன், திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் ரயில்கள் தொலைதூரம் செல்வதாகப் புகார் தெரிவித்தனர். எனவே, பயண நேரத்தை குறைக்கும் விதமாக கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக சிறப்பு கட்டண ரயில்களை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே, திருநெல்வேலி, செங்கோட்டைக்கு விடப்பட்ட ரயில்களின் சேவைகளை கிணத்துக்கடவு ரயில்நிலையம் வழியாக மாற்றியமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 2 மணிநேரம் பயணநேரம் சேமிக்கப்படுகிறது. திங்கட்கிழமை தோறும், கோவையில் இருந்து சிறப்பு ரயில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.20 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. இதேபோல, செவ்வாய்கிழமையன்று செங்கோட்டையில் இருந்து மாலை 05.00 மணிக்கு கிளம்பும் அந்த ரயில், மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு கோவை வந்தடைகிறது. 

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை இரவு 11.50 புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 08.35 மணிக்கு சென்றடைகிறது. மாதந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 04.30 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...