காஞ்சி சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம்

காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் காலமானதையடுத்து, இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் காலமானதையடுத்து, இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தலைமை மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் கடந்த மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மடத்தின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் அடுத்த மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர மடத்தின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள விஜயேந்திரருக்கு தற்போது 49 வயதாகிறது. 

இவரது இயற்பெயர் சங்கர நாராயணன். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் எனும் கிராமத்தில் இவர் 1969-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி பிறந்தார். 14 வயதிலேயே மடத்துக்கு வந்து விட்டதால் சங்கர மடத்தின் அனைத்துப் பணிகளிலும் இவருக்கு அதிகமான அனுபவம் உள்ளது. இவர் இளைய பீடாதிபதியாக பதவி ஏற்ற உடனேயே  சந்திரசேகரேந்திர சுவாமிகள் மீது பத்து சுலோகம் அடங்கிய “தசகம்“ எழுதினார்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஸ்ரீவிஜயேந்திர பெயரும் சேர்க்கப்பட்டது. 25-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்காக 2005-ல் கைதாகி விடுதலையானார். 

கடந்த ஜனவரி மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்தை வேண்டும் என்றே அவர் அவமதித்ததாக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி ஆன்மிக பெரியவர்களும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...