காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் , " ஹார்வாடு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க இதுவரை சுமார் 39.5 கோடி மேல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சரே இறுதி அறிக்கை கொடுப்பார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது.
இதுவரை இல்லாத வகையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளையும் வாதங்களையும் காவிரி தொடர்பாக அரசியல் கட்சிகள் முன்வைத்திருக்கின்றன.காவிரி விவாகரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி யாரும் ஏதுவும் செய்ய முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பொதுமேடையிலே பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு சாதகமாக நல்ல முடிவைத் தரும் என்று நம்புகிறோம்." என்றார்.