நீலகிரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த்துறையின் முத்தமிழ் பேரவை சார்பாக கருத்தரங்கில் நடைபெற்ற இப்போட்டி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. இதில், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து நூற்றிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இறுதியில், புல்மோர்ஸ் மேல்நிலைப்பள்ளி சுழற்கோப்பையைத் தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோ ஷீலா மற்றும் ஆங்கிலத்துறைத் தலைவர் ஷோபனா ராஜகுமாரி கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.