ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நேற்று மாலை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை மடக்கி விசாரித்த போது அதில் 108 பொட்டலங்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த தர்மர் (50), பாண்டீஸ்வரன் (22), இருளாண்டி (42) மற்றும் சதீஸ் குமார் (33) ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா வியாபாரிகள் பயன்படுத்திய கார், பணம் ரூ.1,50,000 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறையிலடைத்தனர்.