ஐ,என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் : ஐ,என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 6-ம் தேதி வரை காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு காங்கிரஸ் கட்சியினர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.