குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அட்டகாசம் : பொதுமக்கள் பீதி

கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 



வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி எஸ்டேட் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் குட்டியுடன் காட்டு யானைகள் நுழைந்தன. இந்த யானைகள் குடியிருப்பு அருகாமையில் உள்ள ரேசன் கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்து, அரிசி, சர்க்கரை மூட்டைகளை நாசம் செய்தன. இதையறிந்த அருகாமையில் இருந்த தொழிலாளர்கள் காட்டு யானைகள் கூட்டத்தை தீப்பந்தம் காட்டியும், கூச்சலிட்டும் விரட்டினார்கள். யானைகள் அப்போது, சிறிது தூரம் சென்றது. யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக நினைத்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர். 



ஆனால், மீண்டும் அதே காட்டு யானைக் கூட்டம் அதிகாலை 4.00 மணியளவில் அதே ரேசன் கடையை சேதப்படுத்தியது. பொதுமக்கள் விடிய விடிய காட்டு யானைக் கூட்டத்தை விரட்டினர். நேற்று முன்தினமே காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதி வனப்பகுதிக்குள் இருந்தது வனத்துறையினருக்கு தெரிந்திருந்தும், வனத்துறையினர் அலட்சியமாக இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அரசு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து, காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியின் அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...