சிவகங்கையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கோவை : சிவகங்கையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சிவகங்கை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜபாண்டி தலைமையில் வழக்கறிஞர்கள் சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பேருந்தினை மறித்து ஓட்டுநரை, வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜபாண்டி உட்பட வழக்கறிஞர்கள் பலரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த கைது சம்பவத்தைக் கண்டித்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும்படி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது. இதனை ஏற்று கோவை வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை. வழக்குகள் விசாரணையின்றி ஒத்திவைக்கப்பட்டன. வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.