சிறையில் சசிகலாவுக்கு சலுகை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தர உறுதுணையாக இருந்த 2 உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தர உறுதுணையாக இருந்த 2 உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன. இது தொடர்பாக சிறையில் ஆய்வு நடத்தி டி.ஐ.ஜி. ரூபா அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவிடம் தாக்கல் செய்து இருந்தார். இந்த அறிக்கை மீது அவர் நடவடிக்கை எடுக்காததால் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையை கர்நாடக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தார். அந்த அறிக்கையில். டி.ஐ.ஜி. ரூபாவின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மை என்றும் கூறியிருந்தார். ஆனால், ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கிய விவரம் குறித்து அவர் அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை. ரூ. 2 கோடி லஞ்ச விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 26-ந்தேதியே ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி விட்டனர்.

விரைவில் அவர்கள் ஓய்வு பெற்ற சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ஊர்காவல் படையின் அதிகாரியாகப் பணியாற்றி வரும் ரூபாவையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர். இதைத்தவிர பரப்பன அக்ரஹார சிறையின் தலைமை சூப்பிரண்டு மற்றும் சூப்பிரண்டாக இருந்து பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும், சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தர உறுதுணையாக இருந்த 2 உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக ஐ.ஜி. ரூபா கூறுகையில், "சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகை அளிக்கப்பட்டதை நான் சி.சி.டி.வி. பதிவு ஆதாரத்துடன் கர்நாடக ஊழல் தடுப்பு ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்தேன். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டிருந்தேன். அதில், எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு 2 நாட்களில் கர்நாடக அரசு வினய்குமார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறது" என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...