7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி ஊட்டி-யை அடுத்த தீட்டுகல் பகுதியில் அமைந்துள்ள இந்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தினர்.
நீலகிரி: 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி ஊட்டி-யை அடுத்த தீட்டுகல் பகுதியில் அமைந்துள்ள இந்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தினர்.
இந்தியா முழுவதும் நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மையம், கோதுமை ஆராய்ச்சி மையம், உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், கரும்பு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இந்நிறுவனங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி, வாரத்தில் 6 வேலை நாட்களை 5 வேலை நாட்களாகக் குறைக்க கோரியும் இன்று ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் சார்பாக ஒருநாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.